திருப்பரங்குன்றத்து யானை இன்று முகாம் புறப்பாடு
ADDED :1987 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் யானை தெய்வானை மறுவாழ்வு முகாமிற்கு இன்று (ஜூன் 1) அதிகாலை புறப்படுகிறது.மே 24ல் யானை தாக்கி உதவி பாகன் காளிதாசன்இறந்தார். அதன்பின் வனத்துறையினர், கால்நடைத்துறை டாக்டர்கள் தொடர்ந்து யானையை கண்காணித்தனர். யானை நன்றாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.இந்நிலையில் வனத்துறையினர் அறிவுரைப்படி இன்று குன்றத்து யானை தெய்வானை திருச்சி சமயபுரம் அருகே எம்.ஆர்.பாளையத்திலுள்ள யானைகள் மறுவாழ்வு முகாமிற்கு அழைத்து செல்லப்படுகிறது என கோயில் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.