முருகன் தன் தம்பிக்கு கொடுத்த பரிசு
ADDED :2232 days ago
சூரபத்மனின் கொடுமையில் இருந்து தேவர்களை விடுவிக்க முருகன் புறப்பட்டார். சூரபத்மனின் இருப்பிடமான வீரமகேந்திரபுரத்தை நோக்கி செல்லும் வழியில், விந்தியமலையருகே சூரபத்மனின் தம்பியான தாரகாசுரன் குறுக்கிட்டான். அவனைக் கொல்ல மனமின்றி அசுரனை யானையாக மாற்றினார் முருகன். தன் தம்பியான சாஸ்தாவுக்கு பரிசாக கொடுத்தார். அதுவே சாஸ்தாவின் வாகனமாக இருக்கிறது.