பேச வைத்த செந்துாரான்
ADDED :2125 days ago
பதினேழாம் நுாற்றாண்டில் தோன்றிய மகான்களில் குமரகுருபரர் புகழ்பெற்றவர். குழந்தைப்பருவத்தில் பேச முடியாமல் இருந்த இவர், திருச்செந்துார் முருகன் அருளால் பேசும் திறமை பெற்றவர். தன் குருநாதர் ஞானதேசிகரின் கட்டளைப்படி காசிக்குச் சென்று சமயத் தொண்டு செய்தார். காசி விஸ்வநாதர் மீது காசிக்கலம்பகம் பாடினார். பின்னர் சரஸ்வதி மீது ‘சகல கலாவல்லி மாலை’ என்னும் பாடல் இயற்றினார்.
வடநாட்டு மன்னரைக் காணச் சென்ற போது குமரகுருபரருக்கு ஆசனம் கொடுக்க மறுத்த போது காளியருளால் சிங்கத்தின் மீதேறி சபைக்கு சென்றார். இது கண்டு ஆச்சரியப்பட்ட மன்னர் குமரகுருபரருக்கு பரிசளித்தார். மன்னரின் உதவியுடன் காசியில் இவர் நிறுவிய குமாரசுவாமி மடமும், கேதாரேஸ்வரர் கோயிலும் குறிப்பிடத்தக்கவை.