உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலையில் கிரிவலத்திற்கு தடை

திருவண்ணாமலையில் கிரிவலத்திற்கு தடை

 திருவண்ணாமலை; திருவண்ணாமலையில், பவுர்ணமி மாத கிரிவலத்திற்கு, தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், பவுர்ணமிதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வர்.வைகாசி மாத பவுர்ணமி திதி, வரும், 5 அதிகாலை, 3:22 மணி முதல், வரும், 6, அதிகாலை, 1:36 மணி வரை உள்ளது.கொரோனா ஊரடங்கால், பங்குனி மற்றும் சித்திரை மாதங்களில், பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டது. தற்போது, வைகாசி மாத பவுர்ணமிக்கும், கிரிவலம் செல்ல தடை விதித்து, கலெக்டர் கந்தசாமி உத்தரவிட்டுள்ளார். இதனால், பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !