உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா

ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா

ஈரோடு: வைகாசி இரண்டாம் பிரதோஷ விழா, நேற்று ஈரோடு கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் நடந்தது. மாலை, 4:30 மணிக்கு கோவில் மூலவரின் முன்பு உள்ள, நந்தீஸ்வர பெருமானுக்கு, பால், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், கரும்புச்சாறு, எலுமிச்சை சாறு, திருமஞ்சனபொடி, பன்னீர், மஞ்சள், சந்தனம், திருநீர் உள்ளிட்ட திரவியங்களை கொண்டு அபி?ஷகம், வஸ்திர அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், கோவிலில் யாரையும் அனுமதிக்கப்படவில்லை. சில சிவனாடியார்கள் கோவில் முன் நின்று வணங்கி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !