உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஜூன் 9 முதல் குருவாயூரில் பக்தர்களுக்கு அனுமதி

ஜூன் 9 முதல் குருவாயூரில் பக்தர்களுக்கு அனுமதி

குருவாயூர்: ஜூன் 9 முதல் குருவாயூரில் தினமும் 600 பேருக்கு தரிசனம் மற்றும் 60 திருமணங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தினமும் காலை 9:00 மணி முதல் பகல் 1:30 வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். ஒரு மணி நேரத்தில் 150 பேர் தரிசனம் நடத்த முடியும். தரிசனத்திற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம். கோவில் வாசலில் ஒரு நாளில் 60 திருமணங்கள் வரை நடத்த அனுமதி வழங்கப்படும். ஒரு திருமணத்துக்கு மணமகன், மணமகள் உட்பட 10 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அரசின் இந்த முடிவுக்கு கோவில் நிர்வாகக்குழுவும் ஒப்புதல் அளித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !