கடவுளை மனதில் நினைத்தால் மட்டும் போதாதா?
ADDED :2249 days ago
கடவுளை கை குவித்து வழிபடுவதில் என்ன சிரமம் உங்களுக்கு? ‘கரம் குவிவார் உள்மகிழும் கோன் கழல்கள் வெல்க. சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க‘ என்கிறது சிவபுராணம். கோயில் கோபுரங்கள், தெய்வச்சிலைகளைக் கண்டால் கைகூப்பி வழிபட வேண்டும். வீட்டிலோ, அலுவலகத்திலோ இருந்தால் மட்டும் கடவுளை மனதில் நினைத்துக் கொள்ளலாம்.