உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆணி படுக்கையில் அமர்ந்து யோகா, யாகம் செய்த முதியவர்

ஆணி படுக்கையில் அமர்ந்து யோகா, யாகம் செய்த முதியவர்

திருவண்ணாமலை: உலக நன்மைக்காகவும், மக்கள் கொரோனா தொற்றிலிருந்து தற்காத்து கொள்ளவும் ஆணி படுக்கையில் அமர்ந்து, 70 வயது முதியவர் யோகா செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. யோகாசனம் முலம், உடலை வலிமையாக்கவும், கொரோனா தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ளவும், சரவணன், 70, என்ற முதியவர், ஆணி படுக்கையில், பத்மாசனம், யோகமுத்ரா, பர்வதாசனம், தாடாசனம், சாந்தியாசனம், சித்தாசனம், வீராசனம் உள்ளிட்ட பல்வேறு வகையான ஆசனங்களை செய்தார். இது போன்று, மக்களும், யோகா செய்து உடலை ஆரோக்கியமாக வைத்து, கொரோனா தொற்றிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும் என, விழிப்புணர்வு ஏற்படுத்தினார். ஆணி படுக்கை மீது அமர்ந்த அவர்,  உடலுக்கு எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொருட்களான, நாயுருவி, வெட்டிவேர், கருங்காலகட்டை உள்ளிட்ட பொருட்களை வைத்து யாகம் நடத்தினார். மேலும், இந்த வகை பொருட்களை கஷாயம் காய்ச்சி பருகினால் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !