வேதம் மீட்ட ஹயக்ரீவர்
ADDED :1928 days ago
மது, கைடபர் என்ற அசுரர்கள் ரிக், யஜுர், சாமம், அதர்வணம் ஆகிய வேதங்களை பிரம்மாவிடம் இருந்து திருடினர். குதிரை முகத்துடன் தோன்றிய மகாவிஷ்ணு, அசுரர்களை வதம் செய்து வேதங்களை மீட்டார். பின்னர் சங்கு சக்கரம் தாங்கி, ஞானமுத்திரையுடன் ‘ஹயக்ரீவர்’ என்னும் பெயரில் தேவர்களுக்கு தரிசனம் அளித்தார். சரஸ்வதி அனைத்து வித்தைகளையும் ஹயக்ரீவரிடம் இருந்தே கற்றுக் கொண்டாள். சுவாமி தேசிகன் என்னும் மகானுக்கு காட்சியளித்த ஹயக்ரீவர், கடலுார் மாவட்டம் திருவஹீந்திரபுரத்தில் உள்ள குன்றின் மீது கோயில் கொண்டிருக்கிறார். புதனன்று இவரை வழிபட்டால் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.