உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சன அபிஷேகம்

ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சன அபிஷேகம்

ஈரோடு: வருடத்தில் மூன்று நட்சத்திரம், மூன்று திதிகளில் மட்டும், நடராஜருக்கு அபிஷேகம் நடப்பது வழக்கம். இதன்படி, ஈரோடு கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில், ஆனி மாத திருமஞ்சன அபிஷேகம் நேற்று நடந்தது. கருவறை முன்புள்ள மண்டபத்தில் நடராஜர், சிவகாமி அம்மனுடன் எழுந்தருளினார். கோவில் சிவாச்சாரியார்கள், கங்கை தீர்த்தம், சந்தனாதி தைலம், அரிசி மாவு, திருமஞ்சனப் பொடி, பஞ்சாமிர்தம், தேன், நெய், பழச்சாறு, பால், தயிர், இளநீர், எலுமிச்சை சாறு, கரும்புசாறு, சந்தனம், விபூதி, பூக்கள், கலசதீர்த்தம் உள்ளிட்ட, 16 வகையான, திரவியங்களில், நடராஜருக்கு அபிஷேகம் செய்து, அலங்காரம் செய்து மஹா தீபாராதனை காட்டினர். ஊரடங்கு உத்தரவால், பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !