திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சனம்
ADDED :1971 days ago
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில், ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
அட்டவீரட்டானங்களில் ஒன்றான திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில், 28ம் தேதி ஆனித் திருமஞ்சன விழா நடந்தது. காலை அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம், கலச ஸ்தாபனம், பஞ்சாசன பூஜை, பஞ்சாவரண பூஜை, நடராஜர் சிவகாம சுந்தரிக்கு மகா அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மூலவர் வீரட்டானேஸ்வரர் உள்ளிட்ட மூல மூர்த்திகளுக்கு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. பகல் 11:00 மணிக்கு நடராஜர் சிவகாம சுந்தரிக்கு சிறப்பு அலங்காரம், சோடசோபவுபச்சார தீபாராதனை, கோவில் வளாகத்தில் ஊடல் உற்சவம் நடந்தது. இதில் பக்தர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. சிவாச்சாரியார்கள் மட்டுமே பங்கேற்று விழாவை நடத்தினர்.