வழிபாடு பக்தர்கள் வரவேற்பு
ADDED :2020 days ago
தேவகோட்டை,: ஊரடங்கு காரணமாக அனைத்து வழிபாட்டு தலங்களும் பூட்டப்பட்டன. பூஜாரிகள் மட்டும் தினமும் பூஜை நடத்தினர். பக்தர்கள் வெளியே நின்றபடி சுவாமி கும்பிட்டனர். நேற்று கிராமங்களில் உள்ள கோவில்களை இன்று முதல் திறக்கலாம் என்றும், சமூக இடைவெளியுடன் பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பிற்கு பக்தர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு ஏற்பட்டு உள்ளது.