உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரைக்கால் அம்மையார் கோவிலில் ரூ.9 லட்சம் மதிப்பில் சிற்பங்கள்

காரைக்கால் அம்மையார் கோவிலில் ரூ.9 லட்சம் மதிப்பில் சிற்பங்கள்

காரைக்கால் : காரைக்கால் அம்மையார் கோவிலில், அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையிலான சிற்பங்களை முதல்வர் நாராயணசாமி நேற்று திறந்து வைத்து பார்வையிட்டார்.

காரைக்கால் பாரதியார் சாலையில், காரைக்கால் அம்மையார் கோவில் அமைந்துள்ளது. புனிதவதி என்ற பெயர் கொண்ட இவர், 63 நாயன்மார்களில் பெண் நாயன்மாராக விளங்குகிறார். இவரது வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் வகையில், பக்தர்களின் நன்கொடை மூலம் ரூ.9 லட்சம் மதிப்பில், சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.இந்த சிற்பங்களை, முதல்வர் நாராயணசாமி நேற்று திறந்து வைத்து, பார்வையிட்டார். முன்னதாக அம்மையார் குளக்கரையில் ரூ.4 லட்சம் மதிப்பில் புதிய நுழைவாயில், ரூ.5 லட்சம் மதிப்புள்ள ஹைமாஸ் விளக்குகள், ரூ.2.5. லட்சம் மதிப்பில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் ஆகியவற்றை முதல்வர் நாராயணசாமி திறந்து வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !