கிராம கோவில்கள் திறப்பு: பக்தர்கள் தரிசனம்
ADDED :1920 days ago
உத்திரமேரூர்: உத்திரமேரூர் வட்டாரத்தில், கிராம கோவில்கள் நேற்று திறக்கப்பட்டதால், பக்தர்கள் சுவாமியை தரிசித்தனர். ஊரடங்கில் தளர்வு காரணமாக, கிராமப்புறங்களில் உள்ள சிறு கோவில்கள் திறக்கப்பட்டு, வழிபாடு நடத்த, அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, உத்திரமேரூர் அடுத்த , மானாம்பதி – காஞ்சிபுரம் சாலை , உக்கம்பெரும்பாக்கத்தில், 27 ந ட்சத்திர விருட்ச விநாயகர் கோவிலில், நேற்று, சிறப்பு பூஜை நடந்தது. அதே போல், கருவேப்பம்பூண்டி ஊராட்சி பொன்னியம்மன் கோவில், மாரியம்மன் கோவில், செல்வ விநாயகர் கோவில்களில், சிறப்பு பூஜை நடந்தது. ஊரடங்கு அமலுக்கு வந்து, 100 நாட்களுக்கு பின், கோவில்கள் திறக்கப்பட்டதால், பக்தர்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் நின்று, சுவாமியை தரிசனம் செய்தனர்.