திருச்சுழி பூமிநாதர் கோயிலில் சிறப்பு வழிபாடு
ADDED :2015 days ago
அருப்புக்கோட்டை: திருச்சுழி பூமிநாதர் கோயிலை சுற்றி அஷ்டலிங்கங்கள் உள்ளன. இங்கு நந்திபகவானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டன. கொரோனா வைரஸ் தாக்கம் இன்றி உலக மக்கள் நலமுடன் இருக்க மகா பிரீத்தி ஜெய யாகம், வெள்ளியம்பலநாதருக்கு 1008 ருத்திராட்ச அபிஷேகம் நடந்தது. மலை மேல் மகா தீபம் ஏற்றப்பட்டு கிரி வலமும் நடந்தது.