இந்துக்கள் நம்பிக்கையை இழிவுபடுத்துவதா!
ADDED :1919 days ago
கோவை: வலைதளங்களில் இந்து நம்பிக்கைகளை இழிவுபடுத்துவோர் மீது, உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி, இந்து முன்னணி அமைப்பு சார்பில், நேற்று மனு அளிக்கப்பட்டது.மனுவில் கூறியிருப்பதாவது:கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் இந்து மதம், புராணங்கள், தெய்வங்களை இழிவுபடுத்தி வீடியோக்களை பதிவேற்றம் செய்துள்ளனர். முருக கடவுள், சரஸ்வதி உள்ளிட்ட கடவுள்களின் மந்திரங்களையும், அருவருக்கத்தக்க வகையில் விமர்சித்துள்ளனர்.ஜாதி, மதம், இந்து மதத்தை பற்றி மக்கள் மணம் புண்படும் படி பேசிய, வீடிேயாக்களை தடை செய்து அதை பதிவிட்டவர்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.