உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பந்தலூர் விஷ்ணு கோவிலில் ஆடி அமாவாசை பூஜை நிறுத்தம்

பந்தலூர் விஷ்ணு கோவிலில் ஆடி அமாவாசை பூஜை நிறுத்தம்

பந்தலூர்: பந்தலூர் அருகே பிரசித்தி பெற்ற விஷ்ணு கோவிலில் ஆடி அமாவாசை பூஜைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளா மாநிலம் வண்டூர் நடுவத்து மனை வகை கட்டுப்பாட்டில் பிரசித்தி பெற்ற விஷ்ணு கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆடி அமாவாசை நாளன்று முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் நிகழ்ச்சி மற்றும் சிறப்பு பூஜைகள் காலை 4 மணி முதல் நடத்தப்படும். இதில் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பது வழக்கம். தற்போது கொரோனா தோற்று பரவி வரும் நிலையில், அரசின் உத்தரவுப்படி கோவிலில் ஆடி அமாவாசை சிறப்பு பூஜைகள் மற்றும் திதி கொடுக்கும் நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், பக்தர்கள் யாரும் அன்றையதினம் கோவிலுக்கு மேற்கண்ட பூஜைகள் செய்ய வரவேண்டாம் என்றும் கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !