உலக நன்மைக்கு தன்வந்திரி யாகம்
ADDED :2274 days ago
அலங்காநல்லுார், கொரோன பாதிப்பு அதிகரித்து வருவதை தடுக்க வேண்டியும், உலக நன்மைக்காகவும் அலங்காநல்லுார் தர்ம சாஸ்தா கோயிலில் கணபதி மற்றும் தன்வந்திரி யாகம் நடந்தது. நோய் தீர்க்கும் மாமுனிவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி சீனிவாசன், வட்டார ஐயப்ப பக்தர்கள் சங்கத்தினர் செய்திருந்தனர்.