செல்வ வெக்காளியம்மன் கோவிலில் பால் அபிஷேகம்
ADDED :1909 days ago
உளுந்தூர்பேட்டை: மூலசமுத்திரம் கிராமத்தில் ஸ்ரீ செல்வவெக்காளியம்மன் கோவிலில் ஆடிப்பூரணத்தையொட்டி சிறப்பு பால்குட அபிஷேகம் நடந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா மூலசமுத்திரம் கிராமத்தில் செல்வவெக்காளியம்மன் கோவிலில் ஆடிப்பூரணத்தையொட்டி சிறப்பு பால்குட அபிஷேகம் நடந்தது. ஊரடங்கால் பால்குடம் ஊர்வலம் இன்றி எளிமையான முறையில் பூஜைகள் நடந்தது. அப்போது சுவாமிக்கு பால் அபிஷேகம் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். கோயில் குருக்கள் தாயுமானவன் தீபாரதனை செய்ய பக்தர்கள் வழிபட்டனர்.