உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 2 கோடி பேர் பங்கேற்ற கந்த சஷ்டி பாராயணம்

2 கோடி பேர் பங்கேற்ற கந்த சஷ்டி பாராயணம்

கோவை : உலகம் முழுதும் இருந்து, இரண்டு கோடி ஹிந்துக்கள் பங்கேற்ற கந்த சஷ்டி கவச பாராயணம் (யக்னம்) நிகழ்ச்சி, இணையதளம் வாயிலாக, இன்று(ஜூலை 26) நடந்தது.
வாழும் கலை அமைப்பின் அறங்காவலர், மோகனசுந்தரி ஜெகநாதன், கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், தாமோதரன், சசிரேகா நிருபர்களிடம் கூறியதாவது: ஒவ்வொரு தமிழ் ஹிந்து குடும்பத்தின் ஒரு பகுதியாக, அன்றாடம் பிரார்த்தனைகளில், பக்தியுடன் கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்யப்பட்டது. உடலின் வெவ்வேறு பகுதிகளை, தியானம் மூலம் உயிர்ப்பிப்பதோடு, பாதிப்பு ஏற்பட்டிருந்தால் குணமடையவும் கந்த சஷ்டி கவசம் உதவி செய்கிறது.

இதன் மகத்துவத்தை உணர்ந்து கொள்ளவும், மக்கள் நோய் நொடியில் இருந்து விடுபடவும், இரண்டு கோடி மக்கள் பங்கேற்ற, கந்த சஷ்டி கவச பாராயண நிகழ்ச்சி, இன்று, சஷ்டி திதியன்று இணையதளம் வாயிலாக நடந்தது.வாழும் கலை அமைப்பு நிறுவனர், ஸ்ரீஸ்ரீரவிசங்கர் தலைமை வகித்தார். சமூக ஊடகங்கள் வழியாக, நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இது, மிக பிரமாண்ட ஆன்மிக ஒருங்கிணைப்பு பிரார்த்தனையாக நிகழ்ந்தது.

பேஸ்புக் லைவ் bit.ly/FBKavacham,
யூ டியூப் லைவ் bit.ly/YTKavacham

ஆகிய முகவரிளில் ஒளிபரப்பப்பட்டது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !