உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அயோத்திக்கு குமரியில் இருந்து புனிதநீர்

அயோத்திக்கு குமரியில் இருந்து புனிதநீர்

 நாகர்கோவில் : அயோத்தியில் ராமர் கோயில் கட்ட கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் இருந்து புனித நீர் கொண்டு செல்லப் பட்டது. ஆக.5ல் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்படுகிறது. இதற்காக நாடு முழுவதும் உள்ள புண்ணிய  ஸ்தலங்களில் இருந்து புனித நீர் மற்றும் மண் எடுத்து செல்லப் படுகிறது. நேற்று கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் இருந்து புனிதநீர் மற்றும் மண் சேரிக்கப்பட்டு அயோத்திக்கு அனுப்பப்பட்டது. இதில் குமரி மாவட்ட விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் குமரேசதாஸ்,  செயலாளர் கார்த்திக், பொருளாளர் ராஜேஷ் குமார், மாநில இணை செயலாளர் காளியப்பன், ஆர்.எஸ்.எஸ். நகர பொறுப்பாளர் முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !