வரலட்சுமி நோன்புடன் ஆடி வெள்ளி பெண்கள் வழிபாடு
ADDED :1901 days ago
திருப்பூர்: மூன்றாவது ஆடி வெள்ளிக்கிழமையுடன், வரலட்சுமி நோன்பும் சேர்ந்து வந்திருந்ததால், சுமங்கலி பெண்கள் விரதம் இருந்து நேற்று வழிபட்டனர்.ஆடி வெள்ளி நாட்களில், அம்மன் கோவில்களில் சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள், வேப்பிலை அலங்காரம் என, கோவில் வழிபாடு களைகட்டும். ஊரடங்கு அமலில் இருப்பதால், சமூக இடைவெளியுடன், வழிபாடு நடந்துகொண்டிருக்கிறது.அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள், காலையிலேய நடக்கிறது. பக்தர்கள், வந்து வழிபாடு நடத்திவிட்டு, கூட்டம் சேராமல் சென்றுவிடுகின்றனர். மூன்றாவது வெள்ளிக்கிழமையான நேற்று, வரலட்சுமி நோன்பும் சேர்ந்து வந்திருந்தது.அதிகாலையில் எழுந்த பெண்கள், வீட்டில் தீபம் ஏற்றி வைத்து, மஞ்சள், குங்குமம் வைத்து, விரதத்தை துவக்கி, கோவில்களுக்கு சென்று, அம்மனை வழிபட்டனர்.