வீடுகளில் வேல் வழிபாடு முருக பக்தர்கள் ஏற்பாடு
ADDED :1896 days ago
சூலூர்: வீடுகளில் வேல் வழிபாடு நடத்த, முருக பக்தர்கள் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர். முருகப்பெருமானின் கந்த சஷ்டி கவசத்தை, இழிவாக விமர்சனம் செய்த கருப்பர் கூட்டத்தை எச்சரிக்கும் வகையில், ஒன்றியம் முழுக்க, வரும், 9ம் தேதி சஷ்டி கவசத்தை பாராயணம் செய்து, வேல் வழிபாடு நடத்த, சூலூர் ஒன்றிய வேல் வழிபாட்டுக்குழு, முருக பக்தர்கள் குழுவினர் முடிவு செய்தனர். இதையொட்டி, சூலூர், அரசூர், வாகராயம்பாளையம், கண்ணம்பாளையம், காடாம்பாடி, முத்துக்கவுண்டன்புதூர் உள்ளிட்ட ஊர்களில் வீடு, வீடாக சென்று முருகன் ஸ்டிக்கர், கந்த சஷ்டி கவச புத்தகம் வழங்கி வருகின்றனர்.