உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / டைம்ஸ் சதுக்கத்தில் ராமர் கோவில் டிஜிட்டல் போர்டு

டைம்ஸ் சதுக்கத்தில் ராமர் கோவில் டிஜிட்டல் போர்டு

உ.பி., மாநிலம் அயோத்தியில், சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்ட, உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பரில் அனுமதியளித்தது. கோவில் கட்டுவதற்காக, ஸ்ரீராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை, மத்திய அரசு அமைத்தது. இந்நிலையில், அயோத்தியில், பிரமாண்ட ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, இன்று காலை நடந்தது. பிரதமர் மோடி பங்கேற்று, அடிக்கல் நாட்டுகிறார்.

இதனையொட்டி, நியூயார்க்கில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில், அயோத்தி ராமர் கோவில், ராமரின் படங்கள் 3டியில் காட்சிப்படுத்தப்பட்டன. கேபிடல் ஹில் பகுதியில், ராமர் கோவில் டிஜிட்டல் போர்டுகளை சுமந்து வாகனம் வலம் வந்தது. அமெரிக்க கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டதுடன், அமெரிக்க வாழ் இந்தியர்கள், ராமர் கோவிலுக்கு பூமி பூஜை நடந்த நேரத்தில், வீடுகளில் விளக்குகள் ஏற்றி வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !