மந்தை காளியம்மனுக்கு குளுமை வழங்கல்
ADDED :1944 days ago
தாண்டிக்குடி: தாண்டிக்குடி மந்தை காளியம்மன் கோயில் விழா நடப்பாண்டில் ஊரடங்கால் நடக்கவில்லை. இதற்கு மாற்றாக அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிேஷகம், ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து சுவாமிக்கு பழம், இளநீர், துள்ளுமாவு, மஞ்சள் நீர், பானக்காரம் வைத்து வழிபட்டனர்.ஏராளமானோர் சமூக இடைவெளியுடன் சுவாமி தரிசனம் செய்தனர்.