உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிருஷ்ண ஜெயந்தி பூஜை முறை

கிருஷ்ண ஜெயந்தி பூஜை முறை

கிருஷ்ண ஜெயந்தியன்று காலை லட்சுமியின் அம்சமான பசுவுக்கு பழம் கொடுக்க வேண்டும். பூஜை அறையில் விளக்கேற்றி கிருஷ்ணருக்கு தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு படைக்க வேண்டும். கிருஷ்ணருக்கு விருப்பமான பால், தயிர், வெண்ணெய், அவல், நாவற்பழம், கொய்யாபழம், விளாம்பழம், வெண்ணெய் சர்க்கரை கலந்த நவநீதம் என்னும் கலவை இருப்பது சிறப்பு.  வெல்லச்சீடை, உப்பு சீடை, முறுக்கு, லட்டு, மைசூர்பாகு, தேன்குழல், மனோகரம், திரட்டுப்பால், பர்பியும் படைக்கலாம். கிருஷ்ணர் 108 போற்றி, அஷ்டோத்திரத்தை ஒருவர் படிக்க மற்றவர் சொல்லலாம். ‘ஓம் நமோ பகவதே வாசுதேவாய’  என்னும் மந்திரத்தை 108 முறை ஜபித்து தீபாராதனை காண்பிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !