அயோத்தி அடிக்கல் நாட்டு விழா: சிதம்பரம் அகஸ்தியர் ஞானபீடத்தில் பூஜை
ADDED :1934 days ago
சிதம்பரம் : அயோத்தி ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவை முன்னிட்டு, சிதம்பரம் பா.ஜ., சார்பில் தில்லை அகஸ்தியர் ஞானபீட தளத்தில் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடந்தது.
சிதம்பரம் பா.ஜ., சார்பில் தில்லை அகஸ்தியர் ஞானபீட தளத்தில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடு நடந்தது. மாவட்ட மகளிரணி பொதுச் செயலாளர் சித்ரா சுப்பிரமணியம், செயலாளர் சித்ரா இளங்கோவன் தலைமை தாங்கினர். கல்வியாளர் பிரிவு தலைவர் நாகேஷ்வரன் பாபு, துணைத் தலைவர் லெனின் முன்னிலை வகித்தனர். தமிழ் வளர்ச்சி பிரிவு துணைத் தலைவர் குணசேகரன், செயலாளர் ஜானகிராமன், பொருளாதார பிரிவு செயலாளர் சுரேஷ், மாவட்ட இளைஞரணி ராகவேந்திரன், குமராட்சி கிழக்கு ஒன்றிய துணைத் தலைவர் பாஸ்கர், செயலாளர் செந்தில் உட்பட பலர் பங்கேற்றனர்.