உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விசுவநாத ஈஸ்வரர் கோவிலில் நாளை குருப்பெயர்ச்சி விழா

விசுவநாத ஈஸ்வரர் கோவிலில் நாளை குருப்பெயர்ச்சி விழா

ராசிபுரம்: ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூரில் விசாலாட்சி உடனமர் விசுவநாத ஈஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நாளை (மே 17) நடக்கிறது.குருப்பெயர்ச்சியன்று மாலை 4 மணிக்கு கணபதி பூஜையுடன் நிகழ்ச்சி துவங்குகிறது. தொடர்ந்து தட்சிணாமூர்த்திக்கும், நவக்கிரக நாயகர்களுடன் வீற்றிருக்கும் குருவுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது.மாலை 6 மணிக்கு, 1,008 சகஸ்ரநாம அர்ச்சனை, ருத்ர ஜெபம், நவக்கிரக ஹோமம், குரு காயத்ரி விசேஷ திரவிய ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள், மகா பூர்ணாகுதியும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !