உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நெல்லையில் வேல்பூஜை: மழையிலும் மக்கள் ஆர்வம்

நெல்லையில் வேல்பூஜை: மழையிலும் மக்கள் ஆர்வம்

திருநெல்வேலி: திருநெல்வேலியில் ஆடி சஷ்டி தினத்தில் நேற்று கொட்டும் மழையிலும் கந்தசஷ்டி கவச பாடலுடன் வேல் பூஜை நடந்தது. கந்தசஷ்டி கவசத்திற்கு எதிராக கருபு்பர் கூட்டத்தின் அவதுாறு பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையில், நேற்று ஆடி சஷ்டி தினத்தில் வேல் பூஜை மேற்கொள்ள ஆன்மிக பெரியோர்கள் கேட்டுக்கொண்டனர். திருநெல்வேலி, செண்பகம்பிள்ளை தெருவில் வேல் பூஜை நடத்தப்பட்டது. நேற்று மாலையில் மழை பெய்தது. இருப்பினும் வீடுகள் தோறும் குடைகளை பிடித்த படி பூஜை மேற்கொண்டனர். கந்தசஷ்டி கவச பாடல்கள் ஒலிக்க, மக்களும் வழிபாட்டில் ஈடுபட்டனர்.




தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !