உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பயம் போக்கும் பைரவர்

பயம் போக்கும் பைரவர்

வேடுவனாக வாழ்ந்த வால்மீகி சிவனை நோக்கி தவம் இருந்த தலம் திருப்புத்துார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகில் இத்தலம் உள்ளது. கொன்றை வனமான இங்கு, புற்றின் அடியில் சிவன் காட்சியளித்தால், ‘திருப்புற்றுார்’ என்ற பெயர் ஏற்பட்டது. தற்போது திருப்புத்துார் என மருவியது. இங்குள்ள மூலவருக்கு ‘திருத்தளிநாதர்’ என்பது திருநாமம். இக்கோயிலில் யோகபைரவர் கால் பெருவிரலைத் தரையில் ஊன்றியபடி மேற்கு நோக்கி காட்சியளிக்கிறார். சூரபத்மன் தேவலோகத்தின் மீது படையெடுத்த போது, இந்திரனின் மகனான ஜெயந்தன் இவரை வழிபட்டு பலன் பெற்றான். தேய்பிறை அஷ்டமி, ஞாயிறன்று ராகு காலத்தில் (மாலை 4:30 – 6:00 மணி) யோகபைரவரை வழிபட்டால் எதிரி பயம், வழக்கு, கடன் பிரச்னை தீரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !