உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆதிசங்கரர் சிலை சேதம் பிராமணர் சங்கம் கண்டனம்

ஆதிசங்கரர் சிலை சேதம் பிராமணர் சங்கம் கண்டனம்

 பழநி; கர்நாடக மாநிலம் ஸ்ரீருங்கேரியில் ஆதிசங்கரர் சிலையை சேதப்படுத்தியவர்களுக்கு தமிழக பிராமணர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

மாநில தலைவர்ஹரிஹரமுத்து அய்யர் அறிக்கை: நேற்று முன் தினம் கர்நாடக மாநிலம் ஸ்ரீருங்கேரியில் ஆன் மிக குரு ஆதிசங்கரரின் சிலையை சேதப்படுத்தி, அவமதித்த சமூக விரோதிகளின் செயலை தமிழ்நாடு பிராமணர் சங்கம் கண்டிக்கிறது. ஆதிசங்கரர் பாரத பண்பாட்டின் அடையாளம்.இத்தகைய செயல்கள் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும். இது ஹிந்து கலாசாரத்திற்கு எதிரானது. கர்நாடக, மத்திய அரசுகள் இக்குற்றச்செயல் புரிந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, வருங்காலங்களில் இதுபோன்ற செயல்கள் நடக்காதவாறு இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !