வழிபாட்டு தலங்கள் திறப்பு: சுத்தம் செய்யும் பணி தீவிரம்
ADDED :1930 days ago
சென்னை : வழிபாட்டு தலங்கள் இன்று முதல் திறக்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டதை ஒட்டி கோவில்களில் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றன.
ஊரடங்கு அமலால், ஐந்து மாதங்களாக அவதிப்பட்ட மக்கள், நிம்மதி அடையும் வகையில், புதிய தளர்வுகளை முதல்வர் இ.பி.எஸ்., அறிவித்துள்ளார். அதன்படி, இ - பாஸ் நடைமுறை ரத்து செய்யப்பட்டு, வழிபாட்டு தலங்கள் அனைத்தும் திறக்கப்பட உள்ள நிலையில் சென்னை கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோவிலில் கிருமிநாசினி மருந்துகள் அடித்து ஊழியர்கள் சுத்தம் செய்தனர். ஒரு நாளைக்கு தரிசனத்திற்கு வரும், அதிகபட்ச பக்தர்கள் எண்ணிக்கை நிர்ணயம் செய்யப்படும். ஒரே நேரத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே, பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். இரவு, 8:00 மணி வரை மட்டுமே, பொது மக்கள் தரிசனம் செய்யலாம்.