உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருநாகேஸ்வரத்தில் ராகு பெயர்ச்சி விழா: இணையதளத்தில் ஒளிபரப்பு

திருநாகேஸ்வரத்தில் ராகு பெயர்ச்சி விழா: இணையதளத்தில் ஒளிபரப்பு

தஞ்சாவூர் : திருநாகேஸ்வரம் நாகநாதஸ்வாமி கோயிலில் ராகு பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. அபிஷேகம், அலங்காரம் ஆகியவற்றை இணையதளத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்ட வருகிறது. பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

கும்பகோணம் அடுத்த திருநாகேஸ்வரத்தில் நவக்கிரக தலங்களில் ஒன்றான ராகுதலமாக போற்றப்படும் நாகநாத சுவாமி கோவில் உள்ளது. இங்கு நாககன்னி, நாகவள்ளி என இருதேவியருடன் தனிசன்னதி கொண்டு ராகு பகவான் மங்கள ராகுவாக அருள் பாலிக்கிறார். இங்கு ராகுகாலத்தில் ராகுபகவானுக்கு பாலாபி ஷேகம் செய்து வழிபடுவது சிறப்பு. இந்நிலையில் ராகு பகவான் மிதுன ராசியிலிருந்து ரி‌ஷப ராசிக்கு இன்று (செப்.1-ம் தேதி) பகல் 2.16 மணிக்கு பெயர்ச்சி அடைகிறார். ராகு பெயர்ச்சியின் போது அபிஷேகம், அலங்காரம் ஆகியவற்றை இணைய தளமான யூடிப்பில் ஒளிபரப்ப கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ராகு பெயர்ச்சியை முன்னிட்டு வரும் 30-ம் தேதி லட்சார்ச்சனை தொடங்கியது. தொடர்ந்து 31-ம்தேதி நான்கு கால யாகசாலை பூஜை தொடங்கி, இன்று நடைபெறும் ராகு பெயர்ச்சி விழாவை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !