உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரவாய் பெரியசாமி கோவிலில் மஹா கும்பாபிஷேகம் கோலாகலம்

பரவாய் பெரியசாமி கோவிலில் மஹா கும்பாபிஷேகம் கோலாகலம்

பெரம்பலூர்: "பரவாய் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ பெரியசாமி, ஸ்ரீ பெரியநாயகி, ஸ்ரீ வீரபத்திரர், ஸ்ரீ கருப்பனார் மற்றும் பரிவார சகித தெய்வங்களுக்கு கோவில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா வரும் 25ம் தேதி நடக்கிறது என ஸ்ரீ பெரியாண்டவர் அறக்கட்டளை செயலாளர் ராஜகணபதி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா பரவாய் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ பெரியசாமி, ஸ்ரீ பெரியநாயகி, ஸ்ரீ வீரபத்திரர், ஸ்ரீ கருப்பனார் மற்றும் பரிவார சகித தெய்வங்களுக்கு புதிதாக கட்டப்பட்டுள்ள கோவில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா வரும் 25ம் தேதி காலை 6.30 மணிக்கு மேல் 7 மணிக்குள் நடக்கிறது. கும்பாபிஷேகத்தை நாமக்கல் சிவஸ்ரீ பாஸ்கர் சிவாச்சாரியார், சிவாகமமணி காயத்திரிராமன் சிவாச்சாரியார் பிரதர்ஸ் நடத்தி வைக்கின்றனர். இதைத்தொடர்ந்து 26ம் தேதி முதல் 48 நாட்களுக்கு மண்டல பூஜை நடைபெறும். இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ பெரியாண்டவர் அறக்கட்டளை நிர்வாகிகள், இயக்குநர்கள், பரவாய் ஊர் பொதுமக்கள், பக்தகோடிகள் திரளாக பங்கேற்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !