ஓணம் பண்டிகையையொட்டி அத்தப்பூ கோலமிட்ட பெண்கள்
தர்மபுரி: ஓணம் பண்டிகையை முன்னிட்டு, தர்மபுரி மாவட்டத்தில் வசிக்கும் மலையாள மொழி பேசும் பெண்கள், நேற்று தங்கள் வீடுகளில் அத்தப்பூ கோலமிட்டு கொண்டாடினர். உறவினர்கள், நண்பர்களுக்கு, ஓணம் வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ந்தனர்.
கொரோனா தொற்று பரவலை தடுக்க, ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தமிழக அரசு நேற்று வரை, பொது போக்குவரத்து சேவையை நிறுத்தி வைத்திருந்தது. இதனால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மலையாள மக்கள், கேரளா சென்று ஓணம் பண்டிகையை கொண்டாட முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். மேலும், நிகழ்ச்சிகளில் அதிகளவில் மக்கள் கூட, அனுமதி இல்லாததால், வீடுகளில் நடந்த அத்தப்பூ கோலமிடும் நிகழ்ச்சியில், சிலர் மட்டுமே கலந்து கொண்டனர். தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும், மலையாள மக்கள் நேற்று, தங்கள் வீடுகளில் குடும்பத்தார் மற்றும் உறவினர்களுடன் ?சேர்ந்து, அத்தப்பூ கோலமிட்டு மகிழ்ந்தனர்.