உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மயிலை கபாலீஸ்வரர் தரிசனத்திற்கு ஆன்-லைனில் முன்பதிவு

மயிலை கபாலீஸ்வரர் தரிசனத்திற்கு ஆன்-லைனில் முன்பதிவு

சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர், திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில்களில், பக்தர்கள் தரிசனத்திற்கான இணையதள முகவரி வெளியிடப்பட்டுள்ளது.சென்னை, மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவிலில், இன்று முதல், ஆன்லைன் வாயிலாக, அனுமதி சீட்டு பெற்ற பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.இலவச மற்றும் கட்டண வழி முன்பதிவு சீட்டு கீழ்கண்ட கோவிலின், https://tnhrce.gov.in/eservices/dharshanbooking_index.php?tid=1&catcode=6 என்ற இணையதள முகவரியில் பெற்றுக்கொள்ளலாம்.சென்னை, திருவொற்றியூர், வடிவுடையம்மன் உடனுறை தியாகராஜசுவாமி கோவிலில், பக்தர்கள் நேரடியாகவும், ஆன்லைன் வாயிலாக, அனுமதி சீட்டு பெற்றும், தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.இதற்காக, https://tnhrce.gov.in/eservices/dharshanbooking_index.php?tid=81&catcode=6 என்ற, கோவிலின் இணையதள முகவரியில், அனுமதி சீட்டு பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !