பெண்களை நேசிப்போம்
ADDED :2022 days ago
பெண் குழந்தைகளிடம் பெற்றோர் இரக்கமின்றி நடக்க கூடாது. அவர்களை அன்புடன் பராமரிக்க வேண்டும். அடிப்படை கல்வி வழங்குவதோடு தேவையான வசதிகளையும் அளிக்க வேண்டும். திருமணம் ஆகும் வரை கருணை காட்ட வேண்டும். இதை பின்பற்றுவோருக்கு வானுலகமான சுவனத்தில் தங்கும் வாய்ப்பு கிடைக்கும்.
இளம் சகோதரிகளைக் கொண்ட ஆண்கள் உடன்பிறந்தோரை பாரமாக கருதக் கூடாது. மாறாக அவர்களுக்கான அத்யாவசிய செலவுகளை விருப்பத்துடன் ஏற்க வேண்டும். கல்வி, நற்பண்பு என்னும் ஆபரணங்களால் சகோதரிகளை அலங்கரிக்க வேண்டும். மணமாகும் வரை அவர்களுடன் மிகுந்த கருணையோடு நடந்து கொள்ள வேண்டும்.