உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குறையை போக்கும் அன்பு

குறையை போக்கும் அன்பு


மன்னர் அலெக்சாண்டரின் அரண்மனையில் ஓவியர் ஒருவர் இருந்தார்.  மன்னர் மீது அலாதி அன்பு கொண்ட அவர்   மன்னரை ஓவியமாக வரைய தொடங்கினார்.    
அவரது முகத்தில் காணப்பட்ட பெரிய தழும்பு ஓவியத்தின் அழகை குறைத்தது. எனவே மீண்டும் வரையத் தொடங்கினார். அப்போது தழும்பு தெரியாமல் இருக்க,  மன்னர் சிந்தனையில் இருப்பது போல கையை முகத்தில் வைத்திருப்பது போல வரைந்தார்.
ஓவியத்தைப் பார்த்த மன்னர், ‘‘ என் முகத்திலுள்ள தழும்பைக் காணவில்லையே?’’ என ஆச்சரியப்பட்டார்.
 ‘‘மன்னரே...தழும்பை அன்பு மூடிவிட்டது’’ என்றார் ஓவியர்.   
அன்பு குறைகளைப் போக்கும். அன்பின்மையோ சிறிய குற்றத்தையும் பெரிதுபடுத்தி வாழ்வை நரகமாக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !