பொதுநலன் வேண்டும்
ADDED :2146 days ago
பொதுநலன் கருதி ஜெபித்தால் மட்டுமே நமது நலன் பற்றி ஆண்டவர் சிந்திப்பார்.
நமக்கென ஒரு வீடு, கை நிறைய பணம், நம் பிள்ளைகளுக்கு மட்டும் நல்வாழ்வு என்ற குறுகிய நோக்கத்துடன் இருப்பது கூடாது. கொரோனா போன்ற நோய் அணுகாத வாழ்வு, இயற்கை சீற்றங்களில் இருந்து பாதுகாப்பு, நாடுகளுக்கு இடையே சமாதானம், எதிரிக்கும் நன்மை செய்தல் என பொதுநலனில் அக்கறை காட்ட வேண்டும். இதனால் தனிமனிதன் மட்டுமின்றி சமுதாயமே நலம் பெறும்.