உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாண்டியர் கால கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு

பாண்டியர் கால கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், கோமாளிப்பட்டியில், ஊர்களுக்கு உள்ளூர் படை பாதுகாப்பு தரும்செய்தியை தாங்கிய, 13ம் நுாற்றாண்டு பாண்டியர் கால கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

நகரத்தாருக்கு பாதுகாப்புகாளையார்கோவில் தொல்லியல் குழுமத்தை சேர்ந்த, இலந்தக்கரை ரமேஷ், விக்னேஷ்வரன், சரவணமணியன் கூறியதாவது:உள்ளூர் படை பற்றிய குறிப்புகளுடன், ஆசிரியம் கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. ஆசிரியம் என்பது அடைக்கலம் தருதல், பாதுகாப்பு தருதல் பற்றிய செய்திகளாகும். இதுபோன்ற கல்வெட்டுக்கள் புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் கிடைத்துள்ளன. தனிப்பலகை கற்களில் பொறிக்கப்பட்டு நடப்பட்டுள்ளன.ஊரவர், நாட்டவர், சிற்றரசர் படைப்பிரிவினர், ஊர்களுக்கு பாதுகாப்பு அளித்தனர் என கல்வெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வெட்டு, 13ம் நுாற்றாண்டில், குலசேகரபாண்டியன் காலத்தை சேர்ந்தவை. வில், அம்பு சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது.கேழாநிலை என்பது, தற்போது கீழாநிலைக்கோட்டையாக மாறி இருக்கலாம். இப்பகுதி, நிலைப்படை தங்கும் இடமாக இருந்துள்ளது. வீரர்கள், இரட்டகுலகாபுரம் நகரத்தாருக்கு பாதுகாப்பு வழங்கிஉள்ளனர். பூரணகும்ப சின்னம் இரண்டாவது கல்வெட்டில், குலசேகரபாண்டியனின் எட்டாவது ஆட்சியாண்டில், சித்திரை மாதம், கனவழி நாட்டு படையும், கரணிவற்கு ஆசிரியம் கொடுத்த செய்தி உள்ளது. இதில் பூரணகும்ப சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !