ஆரோக்கிய அன்னை சர்ச் திருவிழா: தேர் பவனி
ADDED :1890 days ago
வாடிப்பட்டி : வாடிப்பட்டி ஆரோக்கிய அன்னை சர்ச் திருவிழா ஆக.,29ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று இரவு சர்ச் வளாகத்திற்குள் தேர் பவனி நடந்தது.முன்னதாக மாலை முப்பெரும் விழா கூட்டுத் திருப்பலியை இறைவார்த்தை சபை மாநிலஅதிபர் சாந்துராஜா நடத்தினார். இன்று காலை (செப்.,9) பாதிரியார் ஆரோக்கிய தாஸ் தலைமையில் நற்கருணை ஆராதனையுடன் கொடியிறக்கம் நடக்கிறது. ஏற்பாடுகளை எஸ்.வி.டி. நிர்வாகி ஏ.ஜோசப், பாதிரியார் ஆரோக்கியதாஸ், உட்பட பலர் செய்திருந்தனர்.