விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் சிறப்பு வழிபாடு
ADDED :2226 days ago
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை சிறப்பாக நடைபெற்றது.
நேற்று தேய்பிறை அஷ்டமி என்பதால், விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் கால பைரவர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தது. பைரவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். வழிபாட்டில் பக்தர்கள், கோயில் ஊழியர்கள் சமூக இடைவெளி விட்டு பூஜையில் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை சந்திரசேகர சிவாச்சாரியார் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.