உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்டாலின் முதல்வராகணும்! கோவிலில் தி.மு.க., வழிபாடு

ஸ்டாலின் முதல்வராகணும்! கோவிலில் தி.மு.க., வழிபாடு

கோவை: பகுத்தறிவு பேசும் தி.மு.க.,வினர், ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்று, கோவையில் சிறப்பு பூஜை நடத்தி அன்னதானம் வழங்கினர்.கடந்த வாரம், முதல்வர் பழனிச்சாமி மீண்டும் முதல்வராக வேண்டும்; சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., பெரும்பான்மையான இடங்களை பிடிக்க வேண்டும் என்று, கோவை- தடாகம் சாலை, இடையர்பாளையம் அண்ணாநகர் கம்பீர சித்திவிநாயகர் கோவிலில் அ.தி.மு.க.,வினர் பிரார்த்தனை செய்து சிறப்பு வழிபாடு செய்தனர்.அதே கோவிலில், தி.மு.க.,வினர், ஸ்டாலின் முதல்வராக வேண்டும்; கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் குணமடைய வேண்டும் என்று, நேற்று முன்தினம் சிறப்பு பூஜை நடத்தி அன்னதானம் வழங்கினர்.இதில், தி.மு.க., மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் பொன்னரசு, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் மாலதி, மாவட்ட மீனவரணி துணை அமைப்பாளர் வெங்கட், 7 வது வட்ட அவைத்தலைவர் துரைபாண்டியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !