நல்லதை பின்பற்றுங்கள்
ADDED :1910 days ago
* கற்றுக் கொண்ட நல்ல விஷயங்களில் நிலைத்து நிற்பீர்களாக.
* நேர்மையின் பாதையில் நடந்தால் புகழுடன் வாழ்வீர்கள்.
* கற்புள்ள பெண்மணி புருஷனுக்கு கிரீடம்; அவமானத்தை உண்டாக்குபவளோ எலும்புருக்கி நோய் போன்றவள்.
* கருணை உள்ளவர்கள் பாக்கியவான்கள். ஏனெனில் அவர்களுக்கு கருணை கிடைக்கும்.
* பேசுவதில் மெதுவாகவும், கோபம் கொள்வதில் தாமதமாகவும் இருங்கள்.
* எல்லாம் காலத்தால் தீர்மானிக்கப்படுகிறது. விதைப்பதற்கு ஒரு காலமும், விளைச்சலை பறிப்பதற்கு ஒரு காலமும் உண்டு.
* சோதனையை சகிப்பவன் பாக்கியவான்; ஏனெனில் சோதனை முடிவில் வெற்றி பெறுவான்.
* பிறர் பார்க்க வேண்டும் என்பதற்காக ஜெபத்தில் ஈடுபடுபடாதீர்கள்.
* எறும்பைக் கவனியுங்கள். சோம்பலைக் கைவிட்டு உழைக்கத் தொடங்குங்கள்.
பைபிள்