உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சி காமகோடி பீடம் அறிவிப்பு

காஞ்சி காமகோடி பீடம் அறிவிப்பு

மதுரை : கொரோனா காலத்தில் விழிப்புணர்வுடன் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதால் பக்தர்கள் வீடுகளில் இருந்து பிரார்த்தனை செய்ய வேண்டும் என காஞ்சிபுரம் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் நிர்வாகம் அறிவித்துள்ளது. பக்தர்கள் அனைவரின் நல்வாழ்வுக்காகவும் தங்கள் வீடுகளில் இருந்து இவ்வுலக நன்மைக்காக தொடர்ந்து பிரார்த்தனை செய்ய வேண்டும். ஸ்ரீ மடம் மற்றும் முகாமிற்கு வந்து தரிசிப்பது குறித்து தகவல் பின்னர் அளிக்கப்படும் என நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !