வெங்கடாசலபதி கோயிலில் புரட்டாசி உற்ஸவ திருக்கல்யாணம்
ADDED :1893 days ago
சிவகங்கை : நாட்டரசன்கோட்டை பிரசன்ன வெங்கடாசலபதி கோயிலில் புரட்டாசி உற்ஸவ விழாவை முன்னிட்டு, திருக்கல்யாண உற்ஸவம் நடந்தது.
இக்கோயிலில் புரட்டாசி உற்ஸவ விழா செப்., 19ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் பெருமாள் அம்பாளுடன்பல்வேறு வாகனங்களில் எழுந்தருளினார். செப்.,24ல் கருட சேவையில் எழுந்தருளினார். ஆறாம் நாளான நேற்று திருக்கல்யாணம் நடந்தது. ஸ்ரீதேவி, பூதேவியருடன் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் எழுந்தருளினார். பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர். செப்., 26ல் வேடுபரி, 28ல் தீர்த்தவாரி உற்சவத்துடன் விழா நிறைவு பெறும்.