காட்டழகர் கோயிலுக்கு அனுமதி மறுப்பு
ADDED :1833 days ago
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் காட்டழகர் கோயிலுக்கு புரட்டாசி 2ம் சனிக்கிழமையை முன்னிட்டு தரிசனம் செய்ய வனத்துறை அனுமதிக்காத நிலையில் பக்தர்களின் கடும் எதிர்ப்பிற்கு பின் அனுமதித்தனர். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள காட்டழகர் கோயிலுக்கு ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய செல்வது வழக்கம். நேற்று புரட்டாசி 2ம் சனிக்கிழமை என்பதால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் காலை 7:00 மணி முதல் சென்றனர். செண்பகதோப்பை கடந்து வனப்பகுதி எல்லைக்குள் சென்ற பக்தர்களை வனத்துறையினர் தடுத்து நிறுத்தினர். பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.வன அலுவலர் முகமது ஷாபாப்,கோயில் செயல் அலுவலர் இளங்கோவன் அறிவுரைப்படி பக்தர்கள் அனுமதிக்கபட்டனர்.