கரிவரதராஜ பெருமாள் கோவிலில் ஏகாதசி சிறப்பு பூஜை
ADDED :1833 days ago
உடுமலை: உடுமலை, பாலப்பம்பட்டி கரிவரதராஜ பெருமாள் கோவிலில், புரட்டாசி ஏகாதசி சிறப்பு பூஜை நடந்தது.
உடுமலை, பாலப்பம்பட்டியில் பூமிநீளா நாயகி சமேத கரிவரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இங்கு, புரட்டாசி மாத சிறப்பு வழிபாடு, தொடர்ந்து நடக்கிறது. புரட்டாசி மாதம், ஏகாதசி மற்றும் திருவோண நட்சத்திரத்தையொட்டி, பெருமாளுக்கு, சிறப்பு பூஜை நடந்தது. சுவாமிகளுக்கு, பால், பன்னீர், உட்பட பல்வேறு திரவியங்களில், அபிேஷகத்தோடு, அலங்காரம் நடந்தது.சிறப்பு அலங்காரத்தில், பூமிநீளாநாயகி சமேத கரிவரதராஜ பெருமாள் சுவாமிகளுக்கு, தீபாராதனை நடந்தது. பக்தர்கள், விதிமுறைகளை பின்பற்றி வழிபட்டனர். பஜனை குழுவினர், பக்தி இசை நிகழ்ச்சி நடத்தினர்.