உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நவராத்திரி கொலு பொம்மை விற்பனை ஆரம்பம்

நவராத்திரி கொலு பொம்மை விற்பனை ஆரம்பம்

மானாமதுரை : மானாமதுரையில் நவராத்திரியையொட்டி வீடுகளில் அலங்கரிக்க விற்பனைக்கு வந்துள்ள மண் கொலுபொம்மைகளை மக்கள் வாங்கி செல்கின்றனர். மானாமதுரையில் 300 க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.ஆண்டுதோறும் சீசனிற்கு தகுந்தாற் போல் மண்ணால் ஆன பொருட்களை தயார் செய்துவருகின்றனர். இந்நிலையில் அக்.17ம் தேதி துவங்க உள்ள நவராத்திரி விழாவிற்காக சுவாமி சிலைகள், திருப்பதி பிரம்மோற்ஸவ சிலைகள், அத்திவரதர் சிலை, அர்த்தநாரீஸ்வரர், சங்கரநாராயணன், அழகர் சுவாமி, மீனாட்சி சுந்தரரேஸ்வரர், தலைவர்கள், தியாகிகள் சிலைகள், பறவைகள் மற்றும் விலங்கு பொம்மைகள், ஆண்டாள் பொம்மைகள் என கொலுவில் வைக்கப்படும். அனைத்து பொம்மைகளும் சுற்றுப்புறசூழலுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் பொம்மைகள் தயார் செய்யப்பட்டு மானாமதுரை மண்பாண்டகூட்டுறவு சங்கத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !