பெரியாண்டிக்குழி பாலமுருகன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
ADDED :1982 days ago
புதுச்சத்திரம்; புதுச்சத்திரம் அடுத்த பெரியாண்டிக்குழி பாலமுருகன் கோவிலில், கார்த்திகையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது.புதுச்சத்திரம் அடுத்த பெரியாண்டிக்குழி பாலமுருகன் கோவிலில் கார்த்திகையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடப்பது வழக்கம். இந்தமாத கார்த்திகையை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு 7.00 மணிக்கு பாலமுருகனுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. இரவு 9.30 மணிக்கு பாலமுருகன் சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் வைத்து கோவிலைச் சுற்றி வலம் வந்தார். இரவு 11.00 மணிக்கு பாலமுருகன், வினாயகர், அம்மன் சுவாமிகள் ஊஞ்சல் உற்வசம் நடந்தது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்தனர்.